கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு
கேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இனிவரும் நாட்களில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்கள் வருகைத்தர இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதுமாத்திரமின்றி இந்த மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் விரைவில் இவர்களின் நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் மற்றும் முல்லைத்தீவு இணைப்பாளர் வசீகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.